பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ‘பயோமெட்ரிக்' வருகைப்பதிவு -கல்வித்துறை முடிவு - EDUNTZ

Latest

Search here!

السبت، 19 أكتوبر 2024

பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ‘பயோமெட்ரிக்' வருகைப்பதிவு -கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு, நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரி யும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆதார் எண்ணுடன் இணைந்த தொடுவுணர் கருவி (பயோமெட்ரிக்) மூலம் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. 
இதன் மூலம் வருகைப்பதிவு விவரங்கள் முதன்மை, மாவட்டக்கல்வி அதிகாரிகள் பார்வைக்கு நேரடியாக சென்றன. இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வந்து செல்வது உறுதி செய்யப்பட்டது. இடையில் கொரோனா தொற்று பரவலின்போது, இந்த முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வருகைப்பதிவை எமிஸ் வலைத்தளத்தின் செயலி வழியாக மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து கருவூலக் கணக்குத்துறையின் அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் முதல் களஞ்சியம் செயலி வழியாக வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை மீண்டும் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பள்ளி மற்றும் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளதா? இல்லையெனில் தேவையுள்ள புதிய கருவிகள் எண்ணிக்கை, இதர வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

இதனால் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை மீண்டும் அமலுக்கு வரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق