பள்ளி மாணவர்களுக்கான வீர கதைப் போட்டி விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search here!

الخميس، 24 أكتوبر 2024

பள்ளி மாணவர்களுக்கான வீர கதைப் போட்டி விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

பள்ளி மாணவர்களுக்கான வீர கதைப் போட்டி விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு 

தீர விருதுகள் பெற்ற வீரர்களின் வாழ்க்கைவரலாறு,அவர்களின்வீர் செயல்பாடுகளை மாணவர்கள் மத்தியில் பரப்புவதற்காக வீர கதை எனும் திட்டத்தை மத்தியபாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மத்தியக் கல்வி அமைச்சகம் இணைந்து 2022-ம் ஆண்டு தொடங்கின. இதன்மூலம் ஆண்டுக்கு இருமுறை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் வழங்கப்படும் விருதுகள் பற்றியும் விருதாளர்களின் வீரச் செயல்கள் குறித்தும் மாணவர்கள் அறிய முடியும். அதன்படி வீர கதை 4.0 போட்டிக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த செப். 17-ம் தேதிதொடங்கியது. விண்ணப் பிக்கும் அவகாசம் சமீபத்தில் முடிந்த நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று அதை அக். 31-ம் தேதி வரை மத்திய அரசு கால நீட்டிப்பு செய்துள்ளது. எனவே, விருப்பமுள்ள மாணவர் கள் வகுப்புவாரியாக வழங்கப்பட் டுள்ள தலைப்புகளின்படி கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், வரை படம், காணொலி ஆகிய படைப்பு களை மேற்கொள்ளலாம். 

மேலும், கூடுதல் விவரங்களை https://innovateindia.mygov.in எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். 


ليست هناك تعليقات:

إرسال تعليق