புயலுக்கு மறுபெயர்கள் - EDUNTZ

Latest

Search here!

السبت، 26 أكتوبر 2024

புயலுக்கு மறுபெயர்கள்

வெப்பமண்டல சூறாவளி என்பது, வேகமாக சுழலும் புயல் ஆகும். இது கடல்களில் இருந்து உருவாகும். 
மிகப்பெரிய சுழலையும் உருவாக்குகிறது. இந்த சுழல் குறைந்த அழுத்த மையத்தையும் நடுவில் குழிந்த கண் அமைப்பையும் கொண்டு சுழல்கிறது. இந்த சுழலின் விட்டம் பொதுவாக 200 முதல் 500 கி.மீ. வரை இருக்கும். சூறாவளி வலுவான நிலையில் இருக்கும்போது இதன் விட்டம் 1000 கி.மீ. வரை கூட இருக்கலாம். ஒரு வெப்பமண்டல சூறாவளி நகர்ந்து இடம் பெயரும் நிலையில் அதிவேகமான காற்று, பலத்த மழை, அதிக அலைகள் போன்றவற்றால் சில சந்தர்ப்பங்களில் மிகவும் மோசமான அழிவை ஏற்படுத்திவிடும். சூறாவளியின் தன்மையை பொறுத்தும், அதன் இருப்பிடத்தைப் பொறுத்தும் இந்த வானிலை நிகழ்வுக்கு வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

சைபீரியன் கடல், மெக்சிகோ வளைகுடா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கு-மத்திய வட பசிபிக் பெருங்கடலில், இது சூறாவளி என்று பொருள்படும் வகையில் அழைக்கப்படுகிறது. மேற்கு, வடக்கு பசிபிக் பகுதியில், இதை டைபூன் என்கிறார்கள். வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில், இது புயல் என்று அழைக்கப்படுகிறது. மேற்கு, தெற்கு பசிபிக் மற்றும் தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலில், இது கடுமையான வெப்பமண்டல சூறாவளி என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில், இது வெப்ப மண்டல சூறாவளி என்று அழைக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق