தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் பி.எட். முடித்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Thursday 17 October 2024

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் பி.எட். முடித்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் பி.எட். முடித்த நாமக்கல் பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு 
பி.எட். படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாமக்கல் பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி சென்னை ஐகோர்ட்டில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் கோரி கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியானது. நானும் விண்ணப்பித்து, தேர்வில் 97 மதிப்பெண் எடுத்தேன். பின்னர், கடந்த மே மாதம் 31-ந் தேதி சான்றிதழ் சரி பார்ப்பு நடந்தது. இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் என் பெயர் இல்லை. 

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு விதிகளின்படி எனக்கு இப்பதவி பெற தகுதியில்லை என்று கூறி, தகுதி இல்லாதோர் பட்டியலில் என் பெயர் முதலில் இடம் பெற்று இருந்தது. இந்த பட்டியலை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். தகுதி தேர்வு இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் கதிவரன், “மனுதாரர் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டார். 

ஆனால், பி.எட். படிப்பை 2018-ம் ஆண்டுதான் முடித்துள்ளார். அதனால், அவருக்கு பணி பெற தகுதி இல்லை'' என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் வக்கீல் என்.கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, ‘2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில், 2016-17 கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் பி.எட். மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், பி.எட். தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

தேர்ச்சி அதன்படி மனுதாரர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். ஆனால், பி.எட். படிப்பில் அவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாடத்திற்கான தேர்வை எழுதி 2018-ம் ஆண்டு பி.எட். பட்டம் பெற்றுள்ளார்'' என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “2017-ம் ஆண்டு தகுதி தேர்விலும், 2018-ம் ஆண்டு பி.எட். தேர்விலும் மனுதாரர் தேர்ச்சி பெற்றுள்ளார். 

இதனால், அவர் ஆசிரியர் பணியை பெற தகுதியில்லாதவர் என்று கூற முடியாது. மனுதாரரை தகுதியில்லாதவர் பட்டியலில் சேர்க்க எந்த காரணமும் இல்லை. எனவே, மனுதாரரின் பெயரை தகுதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அவருக்கு பணி வழங்கும் நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment