வானிலை சின்னங்கள் காட்டும் வண்ண குறியீடு எச்சரிக்கை - EDUNTZ

Latest

Search here!

الثلاثاء، 15 أكتوبر 2024

வானிலை சின்னங்கள் காட்டும் வண்ண குறியீடு எச்சரிக்கை

வானிலை சின்னங்கள் காட்டும் வண்ண குறியீடு எச்சரிக்கை 
வானிலை நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தீவிரம் பற்றி மக்களுக்கு தெரிவிக்க மற்றும் எச்சரிக்கை செய்ய வண்ண குறியீடு அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, இடியுடன் கூடிய மழை, சூறாவளி, புயல், வெப்ப அலைகள் போன்றவற்றின்போது இந்த எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்த குறியீடுகள் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என்று 4 வகைகளாக உள்ளன. 

இந்த வண்ண குறியீடு என்பது ஒரு வானிலை நிகழ்வின் தாக்கம் மற்றும் விளைவு 5 நாட்களுக்கு இருக்கும் என்பதை குறிக்கிறது. இதில், மழைப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்படும்போது பசுமை வண்ண குறியீடு வெளியிடப்பட்டால் 24 மணி நேரத்தில் 64 மி.மீ.க்கு குறைவாக மழை பெய்யும். மஞ்சள் குறியீடு என்றால் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யும். ஆரஞ்சு வண்ணம் 115.5 முதல் 205.4 மி.மீ மழையும், சிவப்பு குறியீடு வெளியிடப்பட்டால் ஒரு நாளில் 204.5 மி.மீ. அளவுக்குமேல் மழை பெய்யும் என்பதன் அடையாளம் ஆகும். இந்த வண்ண குறியீடு எச்சரிக்கைகள், குறிப்பிட்ட வானிலை மாறுபாட்டு சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக வெளியிடப்படுகின்றன. 

பச்சை வண்ண குறியீடு என்பது வானிலை நிகழ்வுகள் இருக்கலாம். பெரிய பாதிப்புகள் இருக்காது, மஞ்சள் மோசமான வானிலை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரஞ்சு வண்ண குறியீடு என்பது மிகவும் மோசமான வானிலை மற்றும் போக்குவரத்து, ரெயில், சாலை மற்றும் விமான பயணத்திலும், மின்சார விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. சிவப்பு எச்சரிக்கை என்பது மிகவும் மோசமான வானிலை ஆகும். மேலும் போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகத்தை சீர்குலைக்கும் என்று தெரிவிக்கிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق