நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவி தொகை பெறவும், ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் ‘நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என 2 முறை நடத்துகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஜூன் மாதம் தேர்வு அறிவிக்கப்பட்டு ஜூன் 19-ந்தேதி நடத்தப்பட்டது. அந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மத்திய கல்வி அமைச்சகம் அதை ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 21-ந்தேதி வரை கணினி வழியாக நடத்தப்பட்டது.
இந்த தேர்வை எழுத 11 லட்சத்து 21 ஆயிரத்து 225 பேர் விண்ணப்பித்து அவர்களில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 224 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு நேற்று வெளியாகியுள்ளது. அதில் 53 ஆயிரத்து 694 பேர் உதவி பேராசிரியராக பணிபுரியவும், 4 ஆயிரத்து 970 பேர் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவி தொகை பெறவும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 70 பேர் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment