மருத்துவமனை காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 19 October 2024

மருத்துவமனை காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மருத்துவமனை காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு  
அரசு மருத்துவக் கல்லுாரி மருத் துவமனையில், தீவிர சிகிச்சை பதிவேடு உதவி யாளர் மற்றும் காலியாக உள்ள 14 பணியிடங்க ளுக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து வமனையில், தாய் - சேய் ஒருங்கிணைப்பு மற்றும் மகப்பேறு பிரிவு காவலர்கள் 3, மருத்துவமனை பணியாளர்கள் 5. பல் சிகிச்சை நிபுணர், செவித் திறன் பரிசோதகர், இயன்முறை பரிசோதகர், பாது காவலர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், தீவிர சிகிச்சை பதிவேடு உதவியாளர் தலா ஒன்று என, 14 காலி பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படை யில் பணி நியமனம் செய்யப்பட உள்ளன. 

இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை, https://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதி விறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு, வரும் 21ம் தேதிக்குள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர், செங்கல்பட்டு என்ற முக வரிக்கு நேடியாகவோ அல்லது விரைவு தபால் மூல மாகவோ அனுப்பி வைக்கலாம். 

அல்லது மருத்துவமனை முதல்வரின், cmpc_tn@yahoo.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment