மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல்
பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில்
2022 நவம்பர் 28 அன்று வானவில் மன்றம் - நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி
வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 13,236 அரசு நடுநிலை. உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில்
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2024-25ஆம்கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற தமிழ்நாடு ஆசிரியர்கள்
அறிவியல் மாநாடு 2024-25செயல்முறைகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது.
அறிவியலும் தொழில்நுட்பமும் பொறியியலும் கணிதவியலும் வாழ்வை சமூக
வாழ்வை மென்மேலும் வசதியாக்க, எளிமையானதாக்க கை கோர்த்து சேவை செய்து
வருகின்றன. எந்த ஒரு தொழில்நுட்பமும் கடந்த நூற்றாண்டைவிட மிகவும் குறுகிய
காலத்திற்குள்ளாகவே மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடுகிறது. அதுபோலவே
பழமையானதாகவும் ஆகிவிடுகிறது.
மாறிவரும் சூழலை எதிர்கொண்டு தங்களை
தகவமைத்துக் கொள்ள எதிர்கால சந்ததியினர் தயாராக வேண்டியுள்ளது. இதற்கேற்ப
வகுப்பறை கற்றல் கற்பித்தலிலும் புதுமையாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
இதனை மனதில் கொண்டே தமிழக அரசின் கல்வித்துறை மாணவர்களின் பல்துறை
வளர்ச்சிக்கு பல்வேறு புதுமையான ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி
வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வானவில் மன்றங்களின் அடுத்தகட்டம்
அனைத்து வகுப்பறைகளிலும் அனைத்து மாணவர்களும் அறிவியலை செய்து பார்த்து
கற்றுப் பகிர்ந்துகொள்வதாகவும், தினம் தினம் புதுமையானதாகப் பரிணமிக்கும்
வாய்ப்புள்ளதாகவும் மாறவேண்டியுள்ளது.
ஏற்கனவே இப்படி படைப்பாற்றலுடன்
செயல்பட்டு வரும் அறிவியல்/கணித ஆசிரியர்களே இதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு
வருகின்றனர். இவர்களின் அனுபவங்களைத் தொகுத்து மற்றவர்களுக்கும்
பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாகவே தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல்மாநாடு 2024-25
திட்டமிடப்படுகிறது.
No comments:
Post a Comment