ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும்’ பயிற்சி - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 22 October 2024

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும்’ பயிற்சி

ஆசிரியர்களுக்கு அக்.28 முதல் ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி  

தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் கற்பித் தல் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில் 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் திட்ட பாடப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. 

அதன்படி, மாநில கருத்தாளர்களுக்கு அக்டோபர் 22, 23-ம் தேதிகளில் இணைய வழியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவர்கள் மூலம், தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கருத்தாளர்களுக்கு 24, 25-ம் தேதிகளில் நேரடியாக பயிற்சி வழங்கப் படும். 

1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 28, 29-ம் தேதிகளிலும், 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர் களுக்கு நவம்பர் 4, 5-ம் தேதிகளிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment