மருத்துவ துறையும், மகத்தான படிப்புகளும்...! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 26 October 2024

மருத்துவ துறையும், மகத்தான படிப்புகளும்...!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சிறு வயதில் இருந்தே, மருத்துவர் கனவு இருந்திருக்கும். அதை நீட் தேர்வு மூலம், சிலர் எட்டிப்பிடித்துவிடுகிறார்கள். ஆனால் பலருக்கு மருத்துவர் கனவு, வெறும் கனவாக இருந்துவிடுகிறது. ஆனால் ‘மருத்துவர்’ படிப்பு, மருத்துவர் பணி ஆகியவற்றை போலவே, மருத்துவ துறையில் நிறைய பணிகளும், படிப்புகளும் இருக்கின்றன. அத்தகைய படிப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம். 
செவிலியர் (B.Sc Nursing) மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல்கள்படி நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் செலியர்களுக்கான பணியில் சேர பி.எஸ்சி நர்ஸிங் (B.Sc Nursing) படிப்பு உதவுகிறது. இது நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு ஆகும். இந்த படிப்பை படிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். இளநிலை பட்டப்படிப்புக்கு ரூ.8000 முதல் ரூ.30,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

 பிசியோதெரபியில் 

இளநிலை (BPT) இளநிலை பிசியோதெரபி அல்லது பி.பி.டி (BPT) என்பது 4½ வருட இளநிலைப் படிப்பாகும். உடல் இயக்கம் சார்ந்த நோய்களுக்கு எளிய உடற்பயிற்சிகள் மூலம் தீர்வு காணும் ஒரு படிப்பு ஆகும். இந்த படிப்பில் சேர மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பிற்கான பாடநெறி ஆறு மாத கட்டாய மருத்துவப் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. 

சைக்காலஜி சைக்காலஜி என்பது உளவியல் படிப்பு ஆகும். சுருக்கமாக சொல்வதென்றால், ஒருவரை வெளிப்புற பார்வையாக அல்லாமல், அவரின் உள்ளத்தின் நினைவுகளை அறிய முயன்றிடும் முயற்சிக்கு கற்றுத்தரும் கல்வியே சைக்கலாஜி எனப்படும். ஒவ்வொருவரின் செயலுக்கும் மன ரீதியான காரணம் இருக்கும். அதை அறிந்து, அதை மாற்றுவதன் மூலம் ஒருவரின் செயலை மாற்றிட முயலும். பி.எஸ்சி படிப்பாக 3 ஆண்டுகள் கற்பிக்கப்படும் இதில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

பி.பார்ம் இளநிலை மருந்தியல் பட்டபடிப்பு நான்கு ஆண்டுகால படிப்பாகும். இந்த படிப்பை முடித்த மாணவர்கள் மருந்தாளுனர் (Pharmacist), விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர் போன்ற பிரிவுகளில் பணியாற்றலாம். இந்தியாவில் பலவிதமான பார்மசி பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றில், டிப்ளமோ இன் பார்மசி (டி.பார்ம்), இளநிலை மருந்தியல் (பி.பார்ம்), மாஸ்டர் ஆப் பார்மசி (எம்.பார்ம்), மருந்தியல் அறிவியல் முதுநிலை (எம்.எஸ்.பார்ம்) மற்றும் மருந்தியல் முதுநிலை தொழில்நுட்பம் (எம்.டெக்.பார்ம்), மருந்தியல் மருத்துவர் (பார்ம்.டி) என நிறைய பட்டப்படிப்புகள் இருக்கின்றன. 

உணவியல் நிபுணர் நோயாளிகளின், உடலின் தேவைக்கேற்ப அவர்களின் உணவுமுறைகளை ஒழுங்குபடுத்தும் நபர் உணவியல் நிபுணர். இந்த படிப்பானது 3 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படும். இத்துறை சார்ந்த படிப்பிற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மருத்துவ உணவியல், சமுதாய உணவியல், நிர்வாக உணவியல் நிபுணர், ஆலோசனை உணவியல் நிபுணர் போன்ற சிறப்புத் துறைகளும் உள்ளன. ஒரு மருத்துவ உணவியல் நிபுணர் நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளை மதிப்பிடுதல், தனிநபர் உணவுத்திட்டம் வகுத்தல், ஆலோசனை வழங்கல், நோயாளிகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை ஆற்றுகிறார். 

மருத்துவ ஆராய்ச்சியாளர் மனிதர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் பாதுகாப்பானதா என சோதிக்கும் விஞ்ஞானிகள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்தப் படிப்பில் சேர பார்மசி, மருத்துவம், உயிரியல் துறையில் இளநிலை முடித்திருக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் இந்த படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் (Medical Transcription), எம்.டி. என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சான்றிதழ் படிப்பு. மருத்துவரின் சிகிச்சை குறிப்புகளை குரல் அல்லது உரை செய்திகளாக மொழிபெயர்ப்பவர்களுக்கு இந்த படிப்பு அவசியமாகிறது. மருத்துவ டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்டுகளுக்கு பொதுவாக அவ்வப்போது வரும் புதுப்புது படிப்புகளை படித்துக்கொண்டே இருக்கவேண்டும். வருங்கால மருத்துவ டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்டுகள் மருத்துவ சொற்கள், உடற்கூறியல் மற்றும் உடலியல், இலக்கணம் மற்றும் சொல் செயலாக்க மென்பொருள் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். 

பயோடெக்னாலஜி பயோடெக்னாலஜியில் இளநிலை அறிவியல் என்பது 3 ஆண்டு இளநிலைப் படிப்பாகும். இது மூலக்கூறு மற்றும் பயன்பாட்டு உயிர் வேதியியலில் கவனம் செலுத்துகிறது. பாடநெறி பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களுடன் மாணவர்களுக்கு போதுமான அறிவு மற்றும் திறன்களை வழங்குகிறது. நீட் இல்லாமல் மருத்துவப் படிப்புகளைத் தொடரும் மாணவர்கள் பயோடெக்னாலஜியில் பி.எஸ்சி படிப்பதன் மூலம் பல்வேறு துறைகளில் பல்வேறு வாய்ப்புகளை ஆராயலாம்.

கார்டியோவாஸ்குலர் டெக்னாலஜி வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல் துறை, கார்டியோவாஸ்குலர் டெக்னாலஜியில் பி.எஸ்சி, இதய நோய்கள் மற்றும் எக்கோ கார்டியோகிராபி, மைக்ரோபயாலஜி, நிணநீர் திசுக்கள் போன்ற பராமரிப்பு தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கணினி வன்பொருள் கருவிகளுடன் அறிவு வழங்கப்படுகிறது. இந்த வல்லுநர்கள் பல்வேறு வகைகளில் மருத்துவர்களுக்கு உதவுகிறார்கள். 

உயிரியல் பி.எஸ்சி உயிரியல் என்பது 3-4 ஆண்டுகள் வரை பயிலும் இளநிலை அறிவியல் பாடப்பிரிவில் அதிகம் விரும்பப்படுகிறது. பல்லுயிர் மற்றும் மருத்துவ நோயறிதல் முதல் சிஸ்டம்ஸ் பிசியாலஜி மற்றும் பொது சுகாதாரம் வரை, கோட்பாட்டு வகுப்புகள் மற்றும் நடைமுறை ஆய்வகங்கள் மூலம் இந்த பாடநெறி விரிவான அறிவை வழங்குகிறது.

No comments:

Post a Comment