நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்க்க தமிழ்நாடு அரசு “பாதம் பாதுகாப்போம் திட்டத்தின்” கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க அரசாணை வெளியிடுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு - EDUNTZ

Latest

Search here!

Monday 28 October 2024

நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்க்க தமிழ்நாடு அரசு “பாதம் பாதுகாப்போம் திட்டத்தின்” கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க அரசாணை வெளியிடுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு

நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்க்க தமிழ்நாடு அரசு “பாதம் பாதுகாப்போம் திட்டத்தின்” கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க அரசாணை வெளியிடுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு

நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் "பாதம் பாதுகாப்போம் திட்டம்" ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தினை அரசு அரசின் மருத்துவமனைகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை இன்று இத்திட்டம் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்பதற்கும் நீரிழிவு பாத பாதிப்புகளுக்கான மருத்துவத்தின் மூலமாக, கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு வழிவகை செய்கிறது. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமாகிய "மக்களைத் தேடி மருத்துவம்" நோய்களை தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மாநிலத்தின் முதன்மையான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே இது போன்ற முன்னெடுப்பை அரசு மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

No comments:

Post a Comment