ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006
மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.1342/அ11/ஒபக/பமேகு/2024, நாள் : 22/10/2024.
பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
அனைத்து வகை
அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்
25-10-2024 அன்று நடைபெறுதல் கூடுதல் கூட்டப்
பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
பார்வை: 1 மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - ந.க.
எண்.1342/C7/பமேகு/ஒபக/2024, நாள்:18.10.2024
2. Director, Directorate of School Education, Chennai-6,
R.C.No. 037289/M1/S1/2024 Dated: 17.10.2024
**
பார்வை-1-இன்படி பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல்
கூட்டத்தினை 25.10.2024, வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மைக்
குழு செயல்படும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடத்திட
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்காண் செயல்முறைகளில் உள்ள கூட்டப்
பொருளில் கீழ்க்கண்டவாறு சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை
அ) போதை பொருள் இல்லாத தமிழ்நாடு (Drug Free Tamil Nadu):
சமூக சீர்கேடுகளில் போதைப் பொருள் பயன்பாடு மிக
முக்கியமானதாக உள்ளது. எதிர்கால நற்சமூகத்தை உருவாக்கும் உயரிய
பணியினைப் பள்ளிகள் மேற்கொள்கிறது என்றால் அது மிகையாகாது.
ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருள்கள்
பயன்பாடு மற்றும் அவற்றால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்கால சமூகம் போதைப்
பொருள் பயன்பாடு இல்லாத சமூகமாக உருவாகும். இதனை உறுதிசெய்ய
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் எவ்வாறு கீழ்க்காண்
செயல்பாடுகளில் உதவமுடியும் என்பதை விவாதித்து தீர்மானமாக
நிறைவேற்ற வேண்டும்.
a) பார்வை-2-இன்படி அமைக்கப்பட்டுள்ள பள்ளியளவில் போதைப்
பொருள் பயன்பாடு எதிர்ப்பு குழு" வில் பள்ளி மேலாண்மைக்
குழுவிலிருந்து ஒருவர் உறுப்பினராக பங்கேற்பதை உறுதிசெய்ய
வேண்டும்.
No comments:
Post a Comment