ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற்றுவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்காததால், கடந்த செப்டம்பர் மாத சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு, பின்னர் மாநில அரசு வழங்கியது.
அதேபோல், அக்டோபர் மாத சம்பளத்தையும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். தீபாவளி பரிசாக முதல்-அமைச்சர் பணிநிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும். மேலும் அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment