அனைவருக்கும் IIT திட்டத்தின் கீழ் 253 அரசு பள்ளிகளுக்கு மின்னணு பயிற்சி பெட்டகம் - EDUNTZ

Latest

Search here!

Friday 18 October 2024

அனைவருக்கும் IIT திட்டத்தின் கீழ் 253 அரசு பள்ளிகளுக்கு மின்னணு பயிற்சி பெட்டகம்

அனைவருக்கும் ஐ.ஐ.டி. திட்டத்தின் கீழ் 253 அரசு பள்ளிகளுக்கு மின்னணு பயிற்சி பெட்டகம் 
பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை ஐ.ஐ.டி, ‘அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்' எனும் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களிடையே அறிவியல் தொடர்பான சிந்தனைகளை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 253 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்னணுவியல் பயிற்சிக் கருவிகள் அடங்கிய பெட்டகத்தை ஐ.ஐ.டி. வழங்கியுள்ளது. 

இதற்காக, அந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சியையும் வழங்கியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை செய்முறை பயிற்சிகளை அளிக்க வேண்டும். 

ஆசிரியர்கள் சென்னை ஐ.ஐ.டி. மூலம் வழங்கப்பட்ட மின்னணுவியல் பெட்டகத்தில் உள்ள கருவிகளைக் கொண்டு செய்முறை பயிற்சிகளை அளிக்க வேண்டும். பயிற்சி பற்றிய விவரங்களை பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment