பள்ளி மாணவர்களின் தொகுத்தறி மதிப்பெண்களை பதிவேற்ற அறிவுறுத்தல்
அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளி மாணவர்களின்
தொகுத்தறி மதிப்பெண்களை பள்ளிக்
கல்வித் துறை செயலியில் பதிவேற்று
மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, தொடக்கக் கல்வித்
துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து
மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும்
அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசு மற்
றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
நிகழ் கல்வியாண்டுக்கான முதல் பருவ
தொகுத்தறித் தேர்வில் மாணவர்கள்
பெற்ற மதிப்பெண்களை பள்ளிக்கல்
விக்கான 'டி.என்எஸ்இடி' (TNSED SCHOOL APP) செயலியில்
ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.
விடைத்தாள்களைதிருத்தியபின்னர்
தொகுத்தறி மதிப்பெண்களை (60 மதிப்
பெண்கள்) அக்டோபர் 9-ஆம் தேதிக்
குள் உள்ளீடு செய்வது அவசியம். இதற்
கான வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்
கப்பட்டுள்ளன.
இந்த தகவலை அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம்
வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசி
ரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்
டும்.
இது சார்ந்து அனைத்துப் பள்ளிக
ளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய
அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்
டக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்
பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق