பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் (மொத்தம் 1848 பேர்), பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில் விடுதிக் காப்பாளராக பணிபுரிய வாய்ப்பு - DSE செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 13 November 2024

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் (மொத்தம் 1848 பேர்), பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில் விடுதிக் காப்பாளராக பணிபுரிய வாய்ப்பு - DSE செயல்முறைகள்


பார்வையில் காணும் கடிதத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர். மிகவும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறையின்கீழுள்ள 1351 விடுதிகளில் தற்போது 497 காப்பாளர் / காப்பாளினி பணியிடங்கள் காலியாகவுள்ளதால், அவ்விடுதிகளை சிறந்த முறையில் நிர்வகிப்பதில் சுணக்கம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு மாவட்டங்களில் இத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாகவுள்ள பட்டதாரி காப்பாளர் / காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களில் பணிபுரிய பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / ஆசிரியைகள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நிரப்புவதற்கு ஆவண செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தங்கள் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்கீழ் செயல்படும் விடுதிகளில் காலியாகவுள்ள காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment