பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 2 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கியும், வேலூர் மாவட்ட கல்வி அலுவலரை இடமாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தேனி மாவட்டம் சண்முக சுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சனுக்கு, விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக (தொடக்கப்பள்ளி) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதிக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சங்கர், காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment