பள்ளி பசுமைத் திட்டத்தின் கீழ் 26 பள்ளிகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 8 نوفمبر 2024

பள்ளி பசுமைத் திட்டத்தின் கீழ் 26 பள்ளிகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு

பள்ளி பசுமைத் திட்டத்தின் கீழ் 26 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அந்த பள்ளிகளில் பசுமை சார்ந்த திட்டப் பணிகளுக்கான நிதியை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஒதுக்கி, அதுதொடர்பான அரசாணையையும் வெளியிட்டு இருக்கிறார். 
அந்த அரசாணையின்படி, தேர்வு செய்யப்பட்ட 26 பள்ளிகளிலும் சூரிய மின்சக்தி தகடு அமைக்க, சொட்டு நீர் பாசனம் அமைக்க, தோட்டம் பராமரிக்க, பசுமை விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளிட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 

அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.20 லட்சம் வீதம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
இதில் சூரிய மின்தகடு, பேட்டரி பராமரிப்புக்காக 2 ஆண்டுக்கு ரூ.6 லட்சம், ஆழ்துளை கிணறு, சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றை அமைக்க ரூ.4 லட்சத்து 50 ஆயிரம், தோட்டம் பராமரிப்புக்கு மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம், மழைநீர் சேகரிப்புக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், காய்கறித் தோட்டம், மருத்துவத் தோட்டம், பழத்தோட்டம் அமைக்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், பசுமை விழிப்புணர்வுக்காக ரூ.2 லட்சம், இதர செலவுகளுக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரம் என அரசாணையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق