தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் உமாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் பிரீ கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.12,000 வரை கல்வி உதவித் தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த உதவித் தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.35,000-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற டிசம்பர் 31-ந்தேதி ஆகும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை -6' என்ற முகவரிக்கு டிசம்பர் 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق