மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) Constable (Driver) பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம்.
வயது வரம்பு. 21 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 செலுத்த வேண்டும்.
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2024
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruitment.itbpolice.nic.in/rect/noticeboards/downloadpdf/307.pdf
No comments:
Post a Comment