சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் மாணவர் சேர்க்கை! - EDUNTZ

Latest

Search Here!

السبت، 2 نوفمبر 2024

சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் மாணவர் சேர்க்கை!

சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் மாணவர் சேர்க்கை 

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தர னார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன் லைன் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் சாக்ரட்டீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இளநிலை பாடப்பிரி வில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிகநிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், இளநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், முது நிலை பாடப்பிரிவில் மேற்கூறிய படிப்புகளுடன் இதழியல் மற் றும் மக்கள் தகவல் தொடர்பியல், குற்றவியல் மற்றும் காவல் அறி வியல், முதுநிலை நூலகம் ஆகியவற்றுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 
இதேபோல், ஆன்லைன் படிப்புகளில் இளநிலை பாடப்பிரி வில் ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல் படிப்புகளுக் கும், முதுநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இதழியல் மற்றும் மக்கள் தக வல் தொடர்பியல் படிப்புகளுக்கும் 2024-25-ஆம் கல்வியாண் டிற்கான மாணவர் சேர்க்கை நவ. 15 வரை நடைபெறும். 

தொலைநெறி கல்வி நேரடி சேர்க்கைக்கு அபிஷேகப்பட்டிபல் கலைக்கழக வளாகம், கோவிந்தபேரி, புளியங்குடி, திசையன் விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம்பட்டி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல் லூரிகளிலும், அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் கற்றல் உதவி மையங்களிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொலைதூர கற்றல் பாடப்பிரிவுகளுக்கு https://msu.ecampuszone.com/dde/centre/main/student_apply.php என்ற இணை யதள முகவரியிலும், ஆன்லைன் படிப்புக்கு https://lead.msuonline.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக் கலாம் எனக் கூறியுள்ளார்.


ليست هناك تعليقات:

إرسال تعليق