அரையாண்டு தேர்வு எப்போது தொடங்கும்? பள்ளிக்கல்வித்துறை விளக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 23 November 2024

அரையாண்டு தேர்வு எப்போது தொடங்கும்? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வு நடைபெறும். அந்த வகையில் அரையாண்டு தேர்வு தேதி குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்தநிலையில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளி கல்வித்துறை நேற்று இரவு வெளியிட்டுள்ளது. 
அதன்படி, பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 23-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு அடுத்த மாதம் 10-ந்்தேதி தொடங்கி 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது என அட்டவணையுடன் கல்வி துறை வெளியிட்டு உள்ளது. இது தவிர, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த மாதம் 16-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையிலும், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலும் மற்றும் 11-ம் வகுப்புக்கும் அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையிலும் அரையாண்டு தேர்வு நடக்கும் என பள்ளிக் கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். 
இதன் மூலம் 23-ந்தேதியுடன் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதியில் இருந்து 1-ந்தேதி வரை விடுமுறை விடுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலை பள்ளி கல்வித்துறை பின்னர் தெரிவிக்கும் என சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment