மிசோரம் மாநில கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் முதல்-மந்திரி லால்துஹோமா பேசியதாவது:-
மாநில மக்களுக்கான திட்டங்களை முறையாகவும், திறம்படவும் நிறைவேற்றுவதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மாநில திட்ட கண்காணிப்பு குழு. திட்டங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
TNPSC NEWS
இது இதுவரை சுமார் 40 திட்டங்களை ஆய்வு செய்துள்ளது. மாநிலத்தில் திட்டங்களை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் நாங்கள் கடுமையாக இருப்போம்.
எனவே அரசு பணிகளில் திறமையானவர்கள் இருப்பதை உறுதி செய்கிறோம். செயல்படாத அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-மந்திரியின் இந்த பேச்சு, அந்த மாநில அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment