இணையதளம் வாயிலாக நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மத்திய அரசு ஏற்பாடு - EDUNTZ

Latest

Search Here!

الاثنين، 4 نوفمبر 2024

இணையதளம் வாயிலாக நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மத்திய அரசு ஏற்பாடு

நீட், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவ-மாணவிகள் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று அதில் வெற்றி பெற்று வருகின்றனர். 
மருத்துவம், என்ஜினீயரிங் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி அவசியம் என்பதால், அதில் மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி வகுப்புகளை இணையதளம் வாயிலாக நடத்தி வருகிறது. 
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இதற்கென்று தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சதீ’ என்ற பெயரில் இந்த இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து பயிற்சி வாயிலாக பயன் அடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. 
இதுமட்டுமல்லாமல், கியூட் நுழைவுத்தேர்வு, எஸ்.எஸ்.சி., வங்கி, ஐ.சி.ஏ.ஆர். போன்ற தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, https://sathee.prutor.ai/ என்ற இணையதளத்துக்கு சென்று எந்த தேர்வுகளுக்கு தயாராக வேண்டுமோ? அதற்கு முன்பதிவு செய்து, இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். மேலும் இணையதளத்தின் கீழ் பகுதியில் நுழைவுத்தேர்வுகளுக்கு இன்னும் எத்தனை நாட்கள், எவ்வளவு நேரங்கள் இருக்கின்றன? என்ற விவரம் பயனுள்ளதாக இருக்கிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق