மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கு பிரின்டர் மற்றும் பேப்பர் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பருவ, இடைப்பருவ, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்க வகுப்புகளுக்கு ஏற்ப, 65 முதல் 120 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க, தேர்வின்போது, மாணவர்களே 'ஏ4 சைஸ்' பேப்பர் வாங்கிச் செல்ல வேண்டும்.
ஆனால், அவர்கள் வாங்கிச் செல்லும் பேப்பர், ஒரே வடிவமைப்பில் இருக்காது என்பதால், பள்ளித் தலைமையாசிரியர்கள் அல்லது ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தைப் பயன்படுத்தி, 'ஏ4 சைஸ்' பேப்பர் கொடுக்கின்றனர்.இந்த நிலையை சமாளிக்க, அனைத்து அரசு பள்ளிகளுக்கு பிரின்டர் மற்றும் பேப்பர் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அனைத்து அரசு பள்ளிகளுக்கும், பிரின்டர்கள் மற்றும் 'ஏ4 சைஸ்' பேப்பர் வழங்க வேண்டும். இதன் வாயிலாக, அந்தந்த பள்ளிக்கு இமெயிலில் அனுப்பப்படும் வினாத்தாள் பக்கங்களை நகல் எடுத்து, மாணவர்களுக்கு வழங்கலாம்.
அதனால், வினாத்தாள் கட்டணம் வசூலிக்க தேவையில்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 'ஏ4 சைஸ்' பேப்பர் வாங்குவதற்கான நிதி ஒதுக்கினால், பருவ, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு விடை எழுதவும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.
No comments:
Post a Comment