மகனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 15 November 2024

மகனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பள்ளிக்கல்வி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்குவதற்கான அவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. 
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். சிறந்த கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வந்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை அமைச்சர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் 2-வது மகன் கவின், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாராட்டு சான்றிதழை பெற்றார். தன் மகனுக்கு தன்னுடைய கையினால் சான்றிதழை வழங்கியதோடு அவரை பாராட்டினார். மேலும் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, ‘கல்வி சார்ந்த படிப்புகளை தாண்டி, கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட சிலவற்றை என்னுடைய மகன் பேசுகையில், தந்தையாக நான் பெருமை கொள்கிறேன்' என்றார். 

அமைச்சரின் மகன் கவின், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பாராட்டு சான்றிதழ் பெற்றது குறித்து அவர் கூறுகையில், ‘என்னுடைய தந்தையின் செயல்பாடு அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. எனக்கு கணிதம் பாடம் மிகவும் எளிமை. பிரெஞ்சு பாடம்தான் கஷ்டம். அதைத்தான் மொழிப்பாடமாக எடுத்து இருக்கிறேன். தமிழை மொழிப்பாடமாக எடுக்கவில்லை' என்றார்.

No comments:

Post a Comment