அரசு பள்ளிகள் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வினாத்தாள் செலவுக்கான நிதியை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் மூலம், வினாத்தாள் தேர்வின் முதல் நாள் அனுப்பப்படுகிறது.
தற்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான செலவு தொகையை அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு செலவுத் தொகை வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இது அரசு உதவி பெறும் பள்ளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது, 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நடக்கும் தேர்வுக்கு முதல் நாள் காலையில் வினாத்தாள் வெளியிடப்படும். தலைமை ஆசிரியர்களே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வினாத்தாள் பிரிண்ட் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் பேப்பர் மற்றும் டோனர் செலவு தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இதுவரை செலவினை தொகை உண்டா, இல்லையா என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை, என்றனர்.
No comments:
Post a Comment