ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு விண்ணப்பப் பதிவில் ஆதார் அட்டையை அங்கீகரிப்பதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பது எப்படி? தேசிய தேர்வு முகமை விளக்கம் - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 8 نوفمبر 2024

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு விண்ணப்பப் பதிவில் ஆதார் அட்டையை அங்கீகரிப்பதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பது எப்படி? தேசிய தேர்வு முகமை விளக்கம்

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந்தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, தேர்வர்கள் ஒவ்வொருவரும் ஆர்வமுடம் விண்ணப்பித்து வருகின்றனர். 
விண்ணப்பப் பதிவில் ஆதார் அட்டை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. கல்வி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் பெயர் பொருந்தாமல் இருந்தால், ஆதார் அட்டை அங்கீகரிப்பதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படுவதாக சில விண்ணப்பதாரர்களிடம் இருந்து தேர்வை நடத்தக் கூடிய தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ.) புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இந்த சிக்கல்களை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்த விளக்கத்தை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் விண்ணப்பப் பதிவின்போது ஆதார் அட்டை பொருந்தவில்லை. 
அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகுங்கள் என்ற செய்தி வரும்போது, அந்த செய்தி பாக்சை மூடிவிட வேண்டும். அவ்வாறு மூடியதும், புதிய திரை ஆன்லைன் விண்ணப்பப் பதிவின்போது தோன்றும். அதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ளது போல் தங்களுடைய பெயரை பதிவிட வேண்டும். 
இதன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள பெயரும், கல்வி சான்றிதழில் உள்ள பெயரும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடுத்தகட்ட விண்ணப்பப் பதிவை தொடர அனுமதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஏதேனும் தகவல்களுக்கு https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்க விண்ணப்பதாரர்களை தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق