நீட், ஜே.இ.இ தேர்வுக்கு இணையவழி இலவச பயிற்சி - EDUNTZ

Latest

இங்கே தேடவும்!

Saturday, 9 November 2024

நீட், ஜே.இ.இ தேர்வுக்கு இணையவழி இலவச பயிற்சி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ‘சதீ’ (SATHEE-Self Assessment Test and Help For Entrance Exam) என்ற இணைய வழி இலவச சுயமதிப்பீட்டு வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதுமாணவர்கள் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) போன்ற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது யு.ஜி.ஜி., மத்திய கல்வித்துறை மற்றும் ஐ.ஐ.டி.கான்பூர் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். மாணவர்கள் இத்தளத்தின் வழி தங்களை மதிப்பீடு செய்து கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

 ‘சதீ’ இணைய வழி தளமானது மாணவர்களுக்கு இலவச கற்றல் பாடப்பதிப்புகள், காணொளி விரிவுரைகள், மாதிரித் தேர்வுகள், நிபுணர் பயிற்சி மற்றும் கற்பவர்களின் சந்தேகங்களை போக்குதல் உட்பட ஏராளமான சேவைகளை வழங்குகிறது. இந்த முயற்சியானது பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமமான கல்விவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விலையில்லா கற்றல் பொருட்கள் மற்றும் கற்றலுக்கான வளங்களை வழங்குவதன் மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. 

4,37,000 மாணவர்கள் ஏற்கனவே இந்தத் தளத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘சதீ’ மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி? அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கமான https://sathee.prutor.ai-க்கு செல்ல வேண்டும். உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் மற்றும் முந்தைய கல்விப்பதிவுகளை வழங்குவதன் மூலம் கணக்கை உருவாக்கி கொள்ள முடியும். ஜே.இ.இ. (JEE), நீட் (NEET), எஸ்.எஸ்.சி. (SSC) போன்ற பயனர் தயாராகும் போட்டித் தேர்வைத் தேர்வு செய்து கொள்ளவும். பதிவு செய்தவுடன், நேரலை அமர்வுகள், சுய மதிப்பீட்டு கருவிகள் மற்றும் காணொளி விரிவுரைகளுக்கான ஆப்ஷன்களை நீங்கள் பெறுவீர்கள். இத்தளத்தில், ஜே.இ.இ மற்றும் பிற பொறியியல் நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் புதிய குறுகிய கால படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் ஜே.இ.இ மற்றும் நீட்தேர்வு போன்ற தேசியபோட்டித் தேர்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு கற்றல் பொருட்களைப் பயன்படுத்தலாம். எஸ்.எஸ்.சி., வங்கி தேர்வுகள், சி.யூ.இ.டி., ஐ.சி.ஏ.ஆர். ஆகிய தேர்வுகளுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். - செ.மதுக்குமார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், ராமநாதபுரம்.

No comments:

Post a Comment