தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி விளையாட்டு தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அதற்காக கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மீதான இணையவழி விளையாட்டுகளின் தாக்கங்கள் என்ன? இணையவழி விளையாட்டுக்கும் மைதானத்தில் விளையாடும் விளையாட்டுக்குமான வித்தியாசங்கள் ஆகிய கருத்துகள் வெளியாகும் தலைப்பில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரை எழுத வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.6 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.4 ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment