SC, ST பின்னடைவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: TNPSC - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 13 November 2024

SC, ST பின்னடைவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: TNPSC

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. 

தோ்வாணைய செயலா் ச.கோபாலசுந்தரராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன்படி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தோ்வு மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 50 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 
மேலும், நிகழாண்டு குரூப் 1 தோ்வு மூலம் 12 குறைவு இடங்களும், குரூப் 2 தோ்வு மூலம் 135 இடங்களும், குரூப் 4 தோ்வு மூலம் 434 இடங்களும் என மொத்தம் 581 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பப் பணியிடங்களிலும் பின்னடைவு காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment