01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 26 December 2024

01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE செயல்முறைகள்

01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE செயல்முறைகள் 
பார்வை (1) இல் காணும் செயல்முறைகளில் 16.08.2024 நாளிட்ட கடிதத்தின் மீது அனைத்து முதன்மைக் கல்வி அலுவலரிகளின் கவனம் ஈர்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு அலுவலகங்களில் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் துய்க்கும் பல்வேறு வகையான விடுமுறை பதிவுகள், ஓய்வூதிய பயன்கள் (OPPAS), பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் (OCPS) கருத்துருக்கள், வகை முன்பணங்கள் மற்றும் Pay Sip ஆகியவற்றை அனைத்து தெரிவிக்கப்பட்டது. பெறவேண்டும் என அதனை பின்பற்றும் வகையில் நமது கல்வித்துறையிலும் அனைத்து நிலை அலுவலர்கள் / பணியாளர்களும் களஞ்சியம் செயலியை பயன்படுத்திட தெரிவித்து இவ்வியக்ககம் வாயிலாக பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் இச்செயலியினை முழுவதுமாக மேலும் பயன்படுத்தவில்லை என கரூவூலகக் கணக்குத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உடன் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

1. களஞ்சியம் செயலி குறித்த பயிற்சி பெற பணியாளர்கள் /அலுவலர்கள் விபரத்தினை இதுவரை அனுப்பிடாத மாவட்டங்கள் உடன் அனுப்பிட வேண்டும். 

2. அனைத்து நிலை அலுவலர்களும் / ஆசிரியர்களும் / பணியாளர்களும் 100 சதவிகிதம் செயலி பதிவுறக்கம் செய்வதுடன் செயலியினை விடுமுறை விண்ணப்பிக்க, ஓய்வூதிய பயன்கள் (OPPAS) கோரிட பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் (OCPS) கருத்துருக்கள் அனுப்பிட அனைத்து வகை முன்பணங்கள் மற்றும் Pay Sip கோரிட பயன்படுத்திட வேண்டும்.

No comments:

Post a Comment