அரசு உதவிெபறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 18 December 2024

அரசு உதவிெபறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம்

அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 30ம் தேதி தூத்துக்குடியில் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 
இது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், கல்லூரி தொடர்பு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான முன்னேற்பாட்டு கூட்டம் நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து பேசுகையில், ‘2024-25ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 30ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்க உள்ளார்’ என்றார்.

No comments:

Post a Comment