பட்டதாரிகள் | ஐடிஐ படித்தவர்கள் | 10ஆம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் என்ஜினியர்களுக்கு பல்வேறு அரசு வேலைவாய்ப்புகள் - EDUNTZ

Latest

Search Here!

السبت، 28 ديسمبر 2024

பட்டதாரிகள் | ஐடிஐ படித்தவர்கள் | 10ஆம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் என்ஜினியர்களுக்கு பல்வேறு அரசு வேலைவாய்ப்புகள்

பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு 


தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) 

பணி இடங்கள்: 457 படிப்பு-

பயிற்சி இடம்: 

இந்தியன் மிலிட்டரி அகாடமி, டேராடூன், இந்திய கடற்படை அகாடமி, எழிமலை, விமானப்படை அகாடமி, ஐதராபாத், அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓ.டி.ஏ.), சென்னை. 

கல்வி தகுதி: 

இந்தியன் மிலிட்டரி அகாடமி, அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓ.டி.ஏ.) ஆகியவற்றுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, இந்திய கடற்படை அகாடமிக்கு பி.இ., பி.டெக். போன்ற படிப்புகள், இந்திய விமானப்படை அகாடமிக்கு 12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதத்துடன் கூடிய பட்டப்படிப்பு அல்லது பி.இ., பி.டெக். 

வயது: இந்தியன் மிலிட்டரி அகாடமி, இந்திய கடற்படை அகாடமி: 2-1-2002-க்கு முன்போ, 1-1-2007-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. இந்திய விமானப்படை அகாடமி: 1-1-2026 அன்றைய தேதிப்படி 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓ.டி.ஏ.): 2-1-2001-க்கு முன்போ, 1-1-2007-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. இந்த அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு முறை: 

எழுத்து தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைத்திறன் தேர்வு 

தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): 

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-12-2024 

இணையதள முகவரி: https://upsc.gov.in
------------------------------------- 

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வேலை 


பணி நிறுவனம்: 

கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் (சி.எஸ்.எல்) 

பணியின் தன்மை: ஒப்பந்த அடிப்படை (5 ஆண்டு) காலி இடங்கள்: 224 

பணி இடம்: கொச்சி பதவி: ஷீட் மெட்டல் ஒர்க்கர், டீசல் மெக்கானிக், பிளம்பர், பெயிண்டர், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பதவிகள் 

கல்வி தகுதி: 10-ம் வகுப்புடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஐ.டி.ஐ. படிப்பை முடித்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

வயது: 30-12-2024 அன்றைய தேதிப்படி 45 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. 

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, செய்முறை தேர்வு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-12-2024 
இணையதள முகவரி: https://cochinshipyard.in/Careers
----------------------- 

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம் 


பணி வழங்கும் நிறுவனம்: 

இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை (ஐ.டி.பி.பி) 

காலி இடங்கள்: 51 பதவி: காவலர், தலைமை காவலர் (மோட்டார் மெக்கானிக்) 

கல்வி தகுதி: தலைமை காவலர் பதவிக்கு 12-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் மோட்டார் மெக்கானிக் சார்ந்த படிப்போ, டிப்ளமோவில் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் படிப்போ முடித்தவர்களாக இருக்க வேண்டும். பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். காவலர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பு அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது: 22-1-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை அனுமதி உண்டு. 

தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-1-2025 
இணையதள முகவரி: https://recruitment.itbpolice.nic.in/rect/index.php#
 -------------------------- 

என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு பணி 


நிறுவனம்: சி.எஸ்.ஐ.ஆர் - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் பணி இடம்: 20 பதவி: விஞ்ஞானி பணி இடம்: சென்னை 

கல்வி தகுதி: எம்.இ., எம்.டெக்., பி.இ., பி.டெக்., பி.எச்டி வயது: 19-1-2025 அன்றைய தேதிப்படி விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 33. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் அனுமதிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-1-2025 தேர்வு முறை: ஷார்ட்லிஸ்ட், நேர்காணல் இணையதள முகவரி: https://scientist-recruit.clri.org/

ليست هناك تعليقات:

إرسال تعليق