ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 13,735 பணி இடங்கள் - EDUNTZ

Latest

Search Here!

السبت، 21 ديسمبر 2024

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 13,735 பணி இடங்கள்

வங்கியில் 13,735 பணி இடங்கள் 
இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவங்களில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) நாடு முழுவதும் உள்ள தனது வங்கி கிளைகளில் கிளார்க் தரத்திலான ஜூனியர் அசோசியேட் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 13 ஆயிரத்து 735 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 336 பணி இடங்களுக்கும், புதுச்சேரியை பொறுத்தவரை 4 பணி இடங்களுக்கும் ஆட்தேர்வு நடைபெற உள்ளது. 31-12-2024 அன்றைய தேதிப்படி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 1-4-2024 அன்றைய தேதிப்படி 20 வயதுக்கு குறைவாகவோ, 28 வயதுக்கு அதிகமாகவோ இருக்கக்கூடாது. அதாவது 2-4-1996-க்கு முன்பாகவோ, 1-4-2004-க்கு பின்பாகவோ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. 
அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு நடத்தப்படும். சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 7-1-2025 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://sbi.co.in/hi/web/careers/current-openings என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق