பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 16/12/2024
வெற்றி நாள்
திருக்குறள்:
"பால்: பொருட்பால் அதிகாரம் :சூது குறள் எண்:935 கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். பொருள்:சூதாடு கருவியும். ஆடும் இடமும், கைத்திறமையும்
மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர்."
பழமொழி :
வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும். A diamond must be cut with a diamond.
இரண்டொழுக்க பண்புகள் :
*இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன். *தினமும்
அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன். பொன்மொழி : வெற்றியாளர் ஒரு போதும்
இழப்பதில்லை, ஒன்று வெல்கிறார் அல்லது கற்கிறார் ---மகாத்மா காந்தி
பொது அறிவு :
1. பிளாஸ்டிக் தயாரிப்பில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது? விடை : ஜெர்மனி. 2.
மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்? விடை: நிக்கோலா டெஸ்லா English words & meanings :
Cooking. - சமைத்தல் Dancing. - நடனம்
வேளாண்மையும் வாழ்வும் :
உட்செலுத்தும் பொருட்களுக்கான செலவு குறைவதாலும், நுகர்வோர் கரிமப் பொருட்களுக்காக
கொடுக்கும் கூடுதல் விலையாலும், கரிம விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கப்
பெறுகிறது.
டிசம்பர் 16 வெற்றி நாள்
வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச
முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின்
நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. 1971 இல் நடந்த
இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து
நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக
உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய
மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி
தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான
கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின்
தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள்
அனுசரிக்கப்படுகிறது.
நீதிக்கதை சிட்டுக்குருவியும் காகமும்
ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது,
எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது.
அதற்கு சுயமாக யோசித்து முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச்
சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?”
என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.
அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற பறவைகள் கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ
காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு
தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல்
காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன அப்போது ஒரு நாள் காகம்
சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன்
வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த
காகங்களுடன் சென்றது.
அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு
இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ
அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து. இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக்
கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார்,
கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார். இந்தக் காகங்களும் பயத்தில்
பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு கொண்டு பறந்து சென்றன.
ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது.
அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்து சிட்டுக்குருவியை
அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி
உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று
எண்ணி வருந்தியது. நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை கேட்க வேண்டும்.
இன்றைய செய்திகள் 16.12.2024
அரசு பேருந்துகளுக்கு தகுதிச்சான்று வழங்குவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என
போக்குவரத்து ஆணையருக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவு.
பார்வை மாற்றுத்
திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட புக் பைண்டிங் பயிற்சி உட்பட மேலும் புதிதாக 7
பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்குகள்
முடித்து வைக்கப்பட்டன. இதில் ரூ.7 ஆயிரம் கோடி பணபட்டுவாடா நடைபெற்றுள்ளதாக தகவல்.
ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்.
ஐ.எஸ்.எல்.கால்பந்து:
கேரள அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
.இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்;
2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை.
Today's Headlines
The state Chief Information Commissioner has directed the Transport
Commissioner to pay due attention to issuing qualification certificates to
government buses.
The Tamil Nadu government informed the High Court that 7
more new training courses, including the discontinued bookbinding training for
the visually impaired, will be started soon.
1.45 crore cases were closed in a
single day through Lok Adalats held across the country. It is reported that Rs.
7 thousand crores of money was paid out of this.
Russian army destroyed 37
Ukrainian drones in a single night.
ISL football: Mohun Bagan defeats Kerala
team.
3rd Test against England; New Zealand leads by 340 runs at the end of
the 2nd day.
Covai women ICT_போதிமரம்
ليست هناك تعليقات:
إرسال تعليق