இசைக்கருவிகளின் ராணி
திருக்குறள்:
பால்பால்: பொருட்பால் அதிகாரம் :சூது குறள் எண்:936 அகடுஆரார் அல்லல் உழப்பர்
சூதுஎன்னும் முகடியால் மூடப்பட் டார்.
பொருள்:
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு நிறைய உணவும்
உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
பழமொழி :
வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம். Domestic medicine is preferable to that of
a physician.
இரண்டொழுக்க பண்புகள் :
*இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன். *தினமும்
அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.
பொன்மொழி :
திட்டமிடாத செயல் துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது--- ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
1. இசைக்கருவிகளின் ராணி என அழைக்கப்படும் கருவி எது? விடை: வயலின். 2. பழுக்கும்
பழங்களுடன் தொடர்புடைய வாயு எது? விடை: எத்திலீன்.
English words & meanings :
Drawingபடம் வரைதல், Fishingமீன் பிடித்தல்
வேளாண்மையும் வாழ்வும் :
வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு தனது
அறிக்கையில்"ஆப்பிரிக்காவில், பெரும்பான்மையான பாரம்பரிய உற்பத்தி அமைப்புக்களை விட
கரிம விவசாயம் உணவுப் பாதுகாப்பிற்கு மேலும் உகந்ததாக இருக்கும்
டிசம்பர் 17 ஓய்வூதியர் நாள்
ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம்
நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம்,
ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும்
வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது
நீதிக்கதை மந்திர மரம்
ஒரு கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விறகு வெட்டி
சந்தையில் விற்று வந்தனர். அண்ணன்காரன் மிகவும் முரட்டுத்தனமாக இருந்தான். ஆனால்
தம்பிக்காரன் அண்ணன் சொல்வதை எல்லாம் கேட்டு அதன்படி கீழ்ப்படிந்து நடந்தான்.
ஒருநாள் அண்ணன்காரன் காட்டிற்கு விறகு வெட்டச் சென்றான். வரிசையில் விறகுகளை வெட்டி
வரும்போது அங்கே ஒரு மந்திர மரம் இருந்தது. அது மந்திர மரம் என்று தெரியாமல் அவன்
அதன் மேல் ஏறி அதன் கிளைகளை வெட்ட ஆரம்பித்தான். அப்போது அந்த மரம் அவனிடம்
பேசியது, “ஐயா தயவு செய்து என் கிளைகளை வெட்டாதீர், அதற்கு பதிலாக நான் உங்களுக்கு
தங்க மாம்பழம் தருகிறேன்” என்றது. அண்ணன்காரன் தங்க மாம்பழமா! என்று ஆச்சரியத்துடன்
அந்த மரம் சொன்னதற்கு சம்மதித்தான். அந்த மரமும் அவனுக்கு சில தங்க மாம்பழங்களை
கொடுத்தது. அவன் அதை பார்த்து கோபத்துடன் “எனக்கு இன்னும் நிறைய மாம்பழங்கள்
வேண்டும், இல்லை என்றால் உன் கிளைகளை நான் வெட்டி தங்க மாம்பழத்தை எடுத்துக்
கொள்வேன்” என்றான். அந்த மரம் கோபத்தில் தன் வேர்களை எல்லாம் சேர்த்து அவனை
மரத்தோடு கட்டிப்போட்டது. அவனால் அதிலிருந்து அசையவே முடியவில்லை. சூரியனும் மறைய
ஆரம்பித்தது, அண்ணன்காரன் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மரத்திடம்
தான் செய்தது அனைத்தும் தவறு தான் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினான். அதற்கு அந்த
மரம், “நானும் என் கிளைகளை வெட்ட வேண்டாம் என்று கெஞ்சினேன் நீ என்னை விட்டாயா”
என்று கேட்டது. இவ்வளவு நேரமாகியும் அண்ணனை காணவில்லையே என்ற பயத்தில் தம்பி அண்ணனை
தேடி காட்டுக்குள் சென்றான். அண்ணன் மரத்தில் வேர்களால் கட்டப்பட்டு இருப்பதை
பார்த்து தம்பி மிகவும் ஆச்சரியப்பட்டான். அண்ணனை அதில் இருந்து விடுவிக்க ரொம்ப
முயற்சி பண்ணினான். அப்போது அண்ணன் சொன்னான், “நான் மிகவும் பெரிய தவறு பண்ணிட்டேன்
இந்த மரம் கிட்ட ரொம்ப முரட்டு தனமா நடந்துகிட்டேன், அதனால இந்த மரம் என்னை சும்மா
விடாது. அது மட்டும் இல்ல உன்னையும் நான் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்.” என்று அவன்
தன் தம்பியிடம் தான் செய்த அனைத்து தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்டான். அந்த மரமும்
செய்த தவறை உணர்ந்து மனம் மாறியதற்காக அவனை விடுவிக்க சம்மதித்தது. அந்த மரம்
அவர்களுக்குத் தேவையான தங்கம் மாம்பழத்தை அளித்தது. அதன் பிறகு அண்ணன் தம்பி
இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாசத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வந்தனர்.
இன்றைய செய்திகள் 17.12.2024
* தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 6,30,621
ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். * அமுதா, அபூர்வா, காகர்லா உஷா உள்பட
5 ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். *
நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்படுவதை
மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது. * மயோட் தீவை சூறையாடிய சிடோ புயல். 1,000 பேர்
பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. * இந்தியாவில் அடுத்த ஆண்டு உலக தடகளப்
போட்டி நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. * மகளிர்
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி : இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Today's Headlines
* Agriculture Minister M.R.K. Panneerselvam has said that 6,30,621 crops have
been damaged in Tamil Nadu due to Cyclone Fenchal and the northeast monsoon. * 5
IAS officers including Amudha, Apurva, and Kakarla Usha have been promoted to
Additional Chief Secretaries. * The Central Government has postponed the
presentation of the ‘One Nation, One Election’ Bill in the State Assembly. *
Cyclone Sido ravaged the island of Mayotte. It is feared that 1,000 people may
have died. * The Athletics Federation of India has announced that the World
Athletics Championships will be held in India next year. * Women's Junior Asia
Cup Hockey Tournament: Indian team wins the championship title. Internal
Covai
women ICT_போதிமரம்
ليست هناك تعليقات:
إرسال تعليق