175 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் - பள்ளிக்கல்வித்துறை - EDUNTZ

Latest

Search Here!

Monday, 30 December 2024

175 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் - பள்ளிக்கல்வித்துறை

175 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.57 கோடி செலவில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 
நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் அரசு பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மானியக்கோரிக்கையின் போது அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக 2024-25-ம் கல்வியாண்டில் 1,000 மாணவர்களுக்கு மேல் படித்து வரும் அரசு பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடியில் தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாறிவரும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் முழுமையான கற்றல் அனுபவத்தை பெறுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு அடிப்படையிலான நுட்பங்கள் மூலம் மாணவர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்துவதற்கும் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. 
 ரூ.57 கோடி செலவில்... அதற்கேற்றாற்போல் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவுகள் உள்ள 2,903 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 82 ஆயிரத்து 21 மாணவர்களில், 5 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற கணக்கில் 56 ஆயிரத்து 422 கணினி, ஹெட்போன்ஸ், கம்ப்யூட்டர் டேபிள், இருக்கை, மின்கலன், இணையதள வசதிக்கான உபகரணங்களுடன் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்க ரூ.270 கோடியே 82 லட்சத்து 56 ஆயிரம் செலவு ஆகும் என பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு தெரிவித்தார். அதில் முதல்கட்டமாக 175 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆயிரத்து 43 கணினிகள் மற்றும் உபகரணங்களுக்கு கூடிய புதிய நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் ரூ.57 கோடியே 80 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment