பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 18/12/2024
ஜெ. ஜெ. தாம்சன்
திருக்குறள்:
"பால்: பொருட்பால் அதிகாரம்: சூது குறள் எண்:937 பழகிய செல்வமும் பண்பும்
கெடுக்கும் கழகத்துக் காலை புகின். பொருள்: சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம்
கழியுமானால், அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும்
கெடுக்கும்."
பழமொழி :
வைகறைத் துயில் எழு. Rise at dawn..
இரண்டொழுக்க பண்புகள் :
*இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன். *தினமும்
அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.
பொன்மொழி :
நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை--- ஒரிசற் மார்டென்
பொது அறிவு :
1. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? விடை: ஐரோப்பா 2. உலகின் மிக நீளமான
மலை எது? விடை: அந்தீஸ் மலை
English words & meanings :
Gardening. - தோட்டக்கலை Hunting. - வேட்டையாடுதல் வேளாண்மையும் வாழ்வும் : வர்த்தக
மற்றும் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் அறிக்கை 24 ஆப்பிரிக்க நாடுகளில் 114
விவசாயத் திட்டங்களை மதிப்பீடு செய்தது. ""இரண்டு மடங்குக்கும் அதிகமான
விளைச்சல்கள் கரிம முறைப்படியானவை அல்லது, அதற்கு மிக நெருக்கமான முறைமைகளைப்
பயன்படுத்தியவை"" என்று இது கண்டறிந்தது."
டிசம்பர் 18 ஜெ.ஜெ. தாம்சன் அவர்களின் பிறந்தநாள்
ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான்
தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு
எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல்,
காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின்
தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக
விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.
நா.பார்த்தசாரதி அவர்களின் பிறந்தநாள்
நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ்
பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி,
வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய
புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால்
'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள்
சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள
கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான
குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன.
சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல்
தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல்
வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்
நீதிக்கதை உண்மையான நண்பன்
ஒரு நாட்டின் அரசரிடம் பெரிய யானை ஒன்று இருந்தது. அது எப்ப பார்த்தாலும் சேட்டை
பண்ணிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் சேவகர்கள் அந்த யானைக்கு சாப்பாடு கொடுக்கும்
போது அந்த யானை அதை சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தது. “இந்த யானைக்கு என்னதான்
ஆச்சு இன்றைக்கு குளிக்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை அழுது கொண்டே இருக்கிறது”
என்று சேவகர்கள் தங்களிடையே பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் அரசனிடம் சென்று,
“அரசே யானை இன்று குளிக்கவும் இல்லை, சாப்பிடவும் இல்லை எப்போ பார்த்தாலும் அழுது
கொண்டே இருக்கிறது. அதற்கு உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்குமோ” என்று எங்களுக்கு
சந்தேகமாக உள்ளது என்று கூறினார்கள். உடனே அரசர், அமைச்சரிடம் என்ன பிரச்சனை என்று
சென்று பார்க்க கட்டளையிட்டார். அமைச்சரும் யானையுடன் சென்று,” உனக்கு என்ன ஆச்சு
ஏன் சோகமாக இருக்கிறாய்” என்று கேட்டார். அதற்கு யானை எந்த பதிலும் கூறாமல் அழுது
கொண்டே இருந்தது. அப்போது அமைச்சர் சேவகர்களிடம், “இந்த யானையின் தினசரி வாழ்க்கை
முறையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா” என்று கேட்டார்.அதற்கு சேவகர்கள் அப்படி
எல்லாம் இல்லை. ஆனால் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நாய்க்குட்டி ஒன்று இந்த யானையிடம்
மிகவும் நட்பாக பழகியது.
இந்த ஊரில் உள்ள ஒருவர் பார்த்துக்கொண்டு அந்த நாய்
குட்டியை விலைக்கு கேட்டார், நாங்களும் அவரிடம் அந்த நாய்க்குட்டியை விற்றுவிட்டோம்
என்று கூறினார்கள். அமைச்சர் தான் கேட்டவை அனைத்தும் அரசரிடம் சென்று கூறினார்.
அமைச்சர், அரசரிடம் “அந்த நாய்க்குட்டி மீண்டும் திரும்பி வந்தால், இந்த யானை
பழையபடி மாறிவிடும்” என்று கூறினார். அப்போது அரசர் அந்த நாய்க்குட்டியை கொண்டு வர
கட்டளையிட்டார். சேவகர்கள் ஊர் மக்களிடம் சென்று அரசர் கட்டளை பிறப்பித்துள்ளதை
கூறினார்கள். “யார் அந்த நாய்க்குட்டியை கொண்டு சென்றார்களோ அவர்கள் இன்றைக்கு அந்த
நாய்க்குட்டியை மீண்டும் அரசரிடம் கொண்டு ஒப்படைக்க வேண்டும்,” என்று சொன்னார்கள்.
இதைக் கேட்ட அந்த நபர் அந்த நாய் குட்டியை மீண்டும் கொண்டு வந்து அரசவையில்
ஒப்படைத்தார். அந்த நாய்க்குட்டியை பார்த்த யானை மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
மீண்டும் அந்த யானையும் நாய்க்குட்டியும் நண்பர்களாக இருந்தனர்.
இன்றைய செய்திகள் 18.12.2024
தமிழகத்தில் பைக் டாக்சி இயங்க தடையில்லை என தமிழக அரசு அறிவிப்பு - தொழிலாளர்கள்
மகிழ்ச்சி.
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு
அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை தனித்தனியாக நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை
அறிவித்துள்ளது.
போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல்திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சட்டவிரோத அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என
சீனா தெரிவித்துள்ளது.
புரோ கபடி லீக்: புனேரி பால்டன் அணியை வீழ்த்தி பாட்னா
பைரேட்ஸ் வெற்றி.
நியூசிலாந்து முன்னணி வீரரான டிம் சவுதி சர்வதேச டெஸ்ட்
கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
Today's Headlines
Tamil Nadu government announces that there is no ban on bike taxis in Tamil
Nadu - workers are happy.
The Rural Development Department has announced
separate fees for granting permission for buildings and plots in rural
panchayats in Tamil Nadu.
The Union Ministry of Social Justice and Empowerment
has formulated a national action plan against drugs. * China has said that it
cannot accept the illegal oppression of the United States.
Pro Kabaddi League:
Patna Pirates win by defeating Puneri Baldwin.
New Zealand leading player Tim
Southee has retired from international Test cricket.
Covai women ICT_போதிமரம்
ليست هناك تعليقات:
إرسال تعليق