குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி. தகவல் - EDUNTZ

Latest

Search Here!

السبت، 21 ديسمبر 2024

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசு துறைகளில் குரூப் 2, 2ஏ பணியிடங்களில் காலி பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், அடுத்தபடியாக முதன்மை தேர்வுகள் எப்போது? என்ற தகவலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. 
குரூப் 2, 2 ஏ பணியிடங்கள் தமிழ்நாடு அரசு துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், முழுநேர விடுதி காப்பாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர் உள்பட பல்வேறு குரூப் 2, 2 ஏ பணியிடங்களில், 2 ஆயிரத்து 540 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான, குரூப் 2, 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடந்தது. தேர்வை, 5 லட்சத்து 83 ஆயிரத்து 467 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில், 29 ஆயிரத்து 809 தேர்வர்கள், குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். 
முதன்மை தேர்வு எப்போது? இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கோபால சுந்தர ராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குருப் 2 மற்றும் குருப் 2ஏ முதன்மைத்தேர்வின் தமிழ் மொழி தகுதித்தேர்வு (தாள்-1) பிப்ரவரி 8-ந்தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். குரூப் 2ஏ பதவிகளுக்கான பொது அறிவு மற்றும் மொழித்தாள் தேர்வு (தாள்-2), கொள்குறி வகையில் எழுத்து தேர்வாக பிப்ரவரி 8-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். குருப் 2 பதவிகளுக்கான பொது அறிவு தேர்வு (தாள்-2) பிப்ரவரி 23-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முன்னதாக, குரூப் 2 ஏ பதவிகளுக்கான பொது அறிவு மற்றும் மொழித்தாள் தேர்வு, கொள்குறி வகையில், கணினி வழி தேர்வாக நடத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق