எல்ஐசி பொன்விழா கல்வி உதவி தொகை திட்டம்: டிச.22-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 12 December 2024

எல்ஐசி பொன்விழா கல்வி உதவி தொகை திட்டம்: டிச.22-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எல்ஐசி பொன்விழா கல்வி உதவித் தொகை திட்டம் 2024-ன் கீழ், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
10 மற்றும் 12-ம் வகுப்பு, டிப்ளமோ அல்லது அதற்கு சமமான சிஜிபிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்வியாண்டு 2024-25-ல் மருத்துவம், பொறியியல், அனைத்து பட்டப் படிப்புகள், ஏதேனும் ஒரு துறையில் பட்டயப் படிப்பில் முதல் ஆண்டு சேர்க்கை பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 

 அதேபோல், தொழிற்கல்வி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மேலும், 10-ம் வகுப்பு முடித்து 11, 12-ம் வகுப்பு, 2 ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வரும் 22-ம் தேதி கடைசி நாள். கூடுதல் தகவல்களை https://licindia.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment