கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள, 500 ஆசிரியர்களை தேர்வு செய்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் பயிற்சி அளிக்க உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறியதாவது:
கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், அறிவியல் புரிதல் மற்றும் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், ஆறாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, அறிவியல் பாடம் கற்பிக்கும், 500 ஆசிரியர்களுக்கு, ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்காக, தர்மபுரி, திண்டுக்கல், சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலுார், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள, 10 கல்வி நிறுவனங்கள், பயிற்சி அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சியின் போது, எதிர்காலத்தில் மாணவர்கள், அறிவியல் துறை சார்ந்த திட்டங்களையும், தொழில்களையும் தேர்வு செய்யும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்தவும் அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment