நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், முன்னணி பொதுத்துறை
பொது காப்பீட்டு நிறுவனத்திற்கு, 500 உதவியாளர்களை பணியமர்த்த
பொதுச் சந்தையில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் 17/12/2024 முதல்
01/01/2025 வரை (இரு நாட்களையும் சேர்த்து) ஆன்லைன் முறையில்
மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேறு
வழிகள் / விண்ணப்ப முறை ஏற்றுக்கொள்ளப்படாது.
வயது (01/12/2024 தேதியின்படி):
குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்; அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்.
கல்வித் தகுதி (01/12/2024 தேதியின்படி): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்
கழகத்தில் பட்டதாரி / அதற்கு இணையான கல்வி. விண்ணப்பதாரர்
விண்ணப்பிக்கும் மாநிலம் / யூனியன் பிரதேச மொழி நன்கு
தெரிந்திருத்தல் அவசியம்.
மொத்த ஊதியங்கள்:
பெருநகரத்தில் ஆரம்பகட்டமாக மாதம் ரூ.40,000/- (தோராயமாக)
இந்த அறிவிப்பு தகவலுக்காக மட்டுமே. மாநிலம் / யூனியன் பிரதேசம் மற்றும் வகை
வாரியான காலியிடங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு, எங்களுடைய
வலைதளம் http://www.newindia.co.in-ல் "Recruitment section'-ல் பார்வையிடவும்.
மும்பை
DGM, CORP. HRM
Search Here!
Wednesday, 11 December 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment