பட்டதாரி ஆசிரியர் பணி: காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்தவும் புத்தாண்டுக்குள் பணி நியமன ஆணை வழங்கவும் வலியுறுத்தல் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 18 December 2024

பட்டதாரி ஆசிரியர் பணி: காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்தவும் புத்தாண்டுக்குள் பணி நியமன ஆணை வழங்கவும் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 

அதன்மூலம், ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை மாதம் 18-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்பிறகு, 5 மாதங்களுக்கு மேலாகியும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. 3 ஆயிரத்து 192 ஆசிரியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை 2 ஆயிரத்து 800 ஆக குறைக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

ஏற்கனவே, 5 ஆயிரத்து 154 பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றும் நிலையில், 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 8 ஆயிரமாகி உள்ளது. எனவே, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புத்தாண்டுக்குள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment