2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை
மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணறும் வகையில்,
ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மாணவர்கள்
தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து
கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம்
உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும்
படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின்
நோக்கமாக அமைகிறது.
ஒரு திரைப்படத்தை வெறுமனே நகரும் பிரேம்களாக பார்ப்பதை விட. உலக சினிமா பற்றி
குழந்தைகளுக்கு ஒரு பரந்த கருத்தை வழங்குவது. பள்ளிகளில் மாணவர்களின் கல்வியை வேறுபட்ட
முறையில் அணுகுதல், கலை, கலாசாரம் மற்றும் திரைப்படங்களை ஒருங்கிணைத்து பிள்ளைகளின்
கற்பனைத்திறன், படைப்பாற்றலை வளர்த்தல். மேலும், இத்திரைபடங்களை கண்ணுறும்
மாணவர்களின் விரிசிந்தனை மேம்படுதல் மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட பண்புகள் பெற
இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது. .
மூவி கிளப்பின் நோக்கங்கள்:
.
திரைப்படங்களை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யவும். திரைப்பட நுட்பங்களைப்
புரிந்துகொள்ளவும், பல்வேறு வகைகள் மற்றும் கருப்பொருள்களுக்கு இடையில் வேறுபடவும்.
No comments:
Post a Comment