மருத்துவ காப்பீடு பாலிசியை வேறு நிறுவனத்திற்கு மாற்றும் போது பழைய பலன்கள்
தொடர்வதற்கு கவனிக்க வேண்டிய அம்சங்கள்.
மருத்துவ காப்பீடு பாலிசியை புதுப்பிக்க
வேண்டிய நிலையில், விரும்பினால் புதிய காப்பீடு நிறுவனத்திற்கு பாலிசியை மாற்றிக்
கொள்ளலாம். பழைய காப்பீடு நிறுவன செயல்பாடு அல்லது சேவையில் அதிருப்தி இருந்தால்
அல்லது மேம்பட்ட சேவை வேண்டும் என விரும்பினால் இப்படி காப்பீடு நிறுவனத்திற்கு
மாற்றிக் கொள்ளலாம். புதிய நிறுவனத்திற்கு பாலிசியை மாற்றிக்கொள்ளும் போது, பழைய
பாலிசியின் பலன்களும் தொடர வழி செய்யப்பட்டுள்ளது. பாலிசியை மாற்றிக்கொள்ளும்
செயல்முறை தொடர்பாக தெளிவான நெறிமுறைகளை காப்பீடு ஆணையம் முன் வைத்துள்ளது.
பாலிசி மாற்றம்
காப்பீடு தொகை, போனஸ், காத்திருப்பு காலம் உள்ளிட்ட அம்சங்களோடு பாலிசியை
மாற்றிக்கொள்ள வழி செய்யப்பட்டிருந்தாலும், முந்தைய பாலிசியில் பெற்றிருந்த பலன்கள்
தொடர்ந்து புதிய பாலிசியிலும் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் செயல்பட
வேண்டும். உதாரணமாக, குறிப்பிட்ட காத்திருப்பு காலம், நோ-கிளைம் போனஸ், பழைய
பாலிசியின் அடிப்படை காப்பீடு தொகைக்கு ஏற்ப அமையும். எனவே, அடிப்படை காப்பீடு தொகை
மற்றும் நோ-கிளைம் போனஸ் இருந்தால், இரண்டுக்கும் சேர்த்து புதிய பாலிசியில்
காப்பீடு பாதுகாப்பு இருந்தால் தான் போனஸ் பலன் பொருந்தும்பாலிசி தொடர்பாக
பொருந்தக்கூடிய குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப, போனஸ் போன்றவை மேற்கொண்டு
தொடராமல் போக வாய்ப்புண்டு.
பொதுவாக, புதிய பாலிசியில் அதிக காப்பீடு பாதுகாப்பை
நாடுவது பொருத்தமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. எனவே, பாலிசியை
மாற்றிக்கொள்ளும் போது மேலோட்டமாக செயல்படாமல், பொருந்தக்கூடிய அம்சங்கள் மற்றும்
விலக்காக அமையக் கூடியவற்றை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பழைய பலன்களை
இழக்காமல் இருக்கும் வகையில், புதிய பாலிசி அமையும் வகையில் பார்த்துக்கொள்ள
வேண்டும்.
ஏற்ற காலம்
பாலிசியை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், முற்றிலும் தேவை எனும் போதே இந்த
வசதியை நாடுவது ஏற்றது. கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று நினைத்து அல்லது
முகவர்கள் பரிந்துரை என்றோ பாலிசி நிறுவனத்தை மாற்றுவது ஏற்றதல்ல. முகவர்கள்
பாலிசியை பரிந்துரைக்கும் போது கமிஷன் பெறுவதை முதன்மையாக கருதலாம். அதே போல,
சிக்கலான நோய் உள்ளவர்கள் குறைந்த பிரிமியம் கொண்ட பாலிசியை பெறுவது பாதகமாக
அமையலாம். மேலும், பாலிசி அளிக்கும் புதிய நிறுவனம், பயனாளிகளை புதிய
பாலிசிதாரராகவே கருதும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அறை வாடகை வசதி போன்ற
புதிய அம்சங்களோடு பாலிசியை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் போது பாலிசி மாற்றம்
உகந்ததாக அமையலாம்.
பழைய நிறுவனத்தின் கிளைம் தீர்வு செயல்முறையில் போதாமையை
உணர்ந்தாலும் பாலிசி மாற தீர்மானிக்கலாம். இணையதளங்கள் மூலம் அணுகுவதை விட, அனுபவம்
வாய்ந்த ஒருவரின் வழிகாட்டுதலை நாடுதல் நல்லது. பாலிசி மாறும் தருணமும் முக்கியம்.
பாலிசியை புதுப்பிக்க 45 நாட்கள் இருக்கும் நிலையில் மாற்றத்தை நாடலாம். ஆனால், 60
நாட்களுக்கு மேல் முன்னதாக முயற்சிப்பதை தவிர்க்கலாம். பாலிசி மாறும் போது நோய்கள்
தொடர்பான தகவல்களை தவறாமல் குறிப்பிடுவது அவசியம். பாலிசி தொடர்பான சிக்கல் இல்லாத
அனுபவம் பெற இது மிகவும் முக்கியம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق