இந்திய ரிசர்வ் வங்கியில் இளநிலை பொறியாளர் (சிவில்/எலக்ட்ரிக்கல்) பணி
இந்திய ரிசர்வ் வங்கி, தனது பல்வேறு அலுவலகங்களில் இளநிலை பொறியாளர்
(சிவில்/எலக்ட்ரிக்கல்) (11 பணியிடங்கள்) பதவிக்கு தகுதியான தேர்வர்களிடமிருந்து
விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பதவிக்கான தேர்வு, நாடு தழுவிய, மையங்கள் வாரியாக
ஆன்லைன் போட்டித் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு மூலம் நடைபெறும்.
விளம்பரத்தின் முழு உள்ளடக்கம் வங்கியின் இணையதளத்தில் (www.rbi.org.in) டிசம்பர்
2024 இறுதி வாரத்தில் வெளியிடப்படும். மேலும் இது எம்பிளாய்மெண்ட் நியூஸ்/ ரோஸ்கார்
சமாச்சாரிலும் வெளியிடப்படும். விண்ணப்பங்கள், வங்கியின் இணையதளம் மூலம் ஆன்லைனில்
மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق