மணற்கேணி செயலியில் இடம்பெற்றுள்ள காணொலி காட்சிகள் மாநில பாடத்திட்ட கணிதம் மற்றும் அறிவியல் பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனிமேஷன் வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது கற்றல் பயணத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு பாடப் பொருளையும் மிகத் தெளிவாகவும், எளிமையான உள்ளார்ந்த புரிதலுடனும் கற்க முடியும் என கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.எனவே அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இந்த அனிமேஷன் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள செல்லும் போது இதுசார்ந்தும் ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களின் பெற்றோரிடத்திலும் இந்த மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வை அனைத்து பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்திடவேண்டும் என்றும் கல்வித்துறை அறிவிறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment