விளையாட்டில் சளைக்காத அரசுப்பள்ளி மாணவர்கள் - EDUNTZ

Latest

Search Here!

الأربعاء، 18 ديسمبر 2024

விளையாட்டில் சளைக்காத அரசுப்பள்ளி மாணவர்கள்

விளையாட்டில் சளைக்காத அரசுப் பள்ளி மாணவர்கள்; முக்கியத்துவம் அளித்தால் பிரகாசமாகும் எதிர்காலம்தடகளம் போன்ற போட்டிகளில், அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாகும்
மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், 1,387 பள்ளிகள், 660க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 148 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு, மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், கட்டமைப்பு வசதிகளுக்காக விளையாட்டு மைதானங்கள் பரப்பளவும் குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் கபடி, கால்பந்து, சிலம்பம் என சில விளையாட்டுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்கேற்ப, வசதிகள் இல்லாததும் ஒருவிதத்தில் காரணம். இதனால், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து போட்டிகளிலும், கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. பொருளாதாரமே தடை விளையாட்டு சங்கத்தினர் கூறியதாவது:தனியார் பள்ளிகளில் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீரர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 
ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசு, மாநகராட்சி பள்ளிகளில் இதற்கு வாய்ப்புகள் குறைவுதான். தடகளம், பேட்மின்டன், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்கள், அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் கபடி, கால்பந்து, சிலம்பம் என சில போட்டிக்கு மட்டுமே செல்கின்றனர். இவர்களுக்கும் மற்ற விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள், கட்டமைப்பு வசதிகளை, பள்ளிகளில் ஏற்படுத்தித்தர வேண்டும். திறமை விஷயத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சளைத்தவர்கள் அல்ல. பொருளாதாரம் மட்டுமே தடை. எனவே, அரசு, மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விளையாட்டு வாயிலாக, ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் அதிக இடமும் பெற முடியும்; விளையாட்டில் தொடர்ந்து சாதிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق