ஃபெஞ்சால் புயல் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரையாண்டு தேர்வுகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 5 December 2024

ஃபெஞ்சால் புயல் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரையாண்டு தேர்வுகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 முன்னிலை: முனைவர்.ச.கண்ணப்பன். ந.க.எண்.52914/எம்/இ1/2024, நாள்.05.12.2024 

பொருள்- 

பள்ளிக் கல்வி - ஃபெஞ்சால் புயல் (Fengal cyclone) கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரையாண்டு தேர்வுகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் சார்பு 

மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஃபெஞ்சால் புயலின் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் கடலூர். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு பள்ளி மாணவர்களின் நலன்கருதி நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை இம்மாவட்டங்களில் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை 02.01.2025 முதல் 10.01.2025 ஆம் தேதிக்குள் நடத்திடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

இதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறு மேற்கண்டுள்ள மாவட்ட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர்கள் மழை நீர் வடிந்த பிறகு முறையாக பள்ளி திறக்கும்போது 10. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்திடவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் ஏதேனும் முடிக்கப்படாமல் இருந்தால் அதனை முடித்திடவும், மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான அறிவுரைகளை ஆசிரியர்கள் மூலமாக வழங்கிட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மாவட்டங்களுக்கும் அரையாண்டு விடுமுறைக் காலம் 2412.2024 முதல் 01.01.2025 வரை பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

பள்ளிக் கல்வி இயக்குநர்

பெறுநர்- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கடலூர். விழுப்பும் மற்றும் திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment